அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். 

இந்நிலையில், அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தொற்று உறுதி செய்யப்பட்டது.  கொரோனா உறுதியான வெற்றிவேல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.