சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான வெற்றிவேலுக்கு சளி, காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனோ தொற்றின் காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த 6ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. சிறப்பாக சிகிச்சை அளித்து வந்த போதிலும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவித்து வந்தது. 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அமமுக பொருளாளர் வெற்றிவேல் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.