Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா... தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு..?

சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இரண்டு இடங்களில் மட்டும் இன்று 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

Corona accelerating again ... Curfew after the election ..?
Author
Tamil Nadu, First Published Mar 30, 2021, 5:36 PM IST

சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இரண்டு இடங்களில் மட்டும் இன்று 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona accelerating again ... Curfew after the election ..?

தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய 5      மாவட்டங் களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக புதிதாக 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் 2 இடங்களில் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை அண்ணா நகரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் பார், திரையரங்குகள், வழிபாட்டு தலங்களை மூடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.Corona accelerating again ... Curfew after the election ..?

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், ”2020ம் ஆண்டு பரவத் துவங்கிய கொரோனாவின் தாக்கம் தணிந்து வந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 21ம் தேதி நிலவரப்படி, 47 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரிக்கு பின் தொற்று பரவல் 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5.81 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்ட அளவில் நிலைமையை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.Corona accelerating again ... Curfew after the election ..?

இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க, டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், விளையாட்டு மைதானங்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் முடிந்த பிறகு இரவு ந்eெர, அல்லது பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்கிற ஐயம் எழுந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios