Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா 3வது அலை... கொத்து கொத்தாக தொற்று..!

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Corona 3rd wave spreading rapidly in Tamil Nadu ... cluster infection ..!
Author
Tamil Nadu, First Published Jan 2, 2022, 10:35 AM IST

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 தொற்று பரவல் அதிகரிப்பில் சென்னை முதலிடத்தையும் அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அதிக அளவில் பரவி உள்ளது. நேற்று ஒரேநாளில் புதிதாக 334 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.Corona 3rd wave spreading rapidly in Tamil Nadu ... cluster infection ..!

கொரோனா பரவல் சென்னையில் கடந்த 10 நாட்களாக 250 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 18-ந்தேதி 125 பேருக்கு உறுதியானது. 29-ந்தேதி 125 பேருக்கு உறுதியானது. 29-ந்தேதி 294 ஆக உயர்ந்தது. தற்போது 682 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 25-ம்தேதி நாள் தோறும் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்த நிலையில் தற்போது தினசரி பரிசோதனை எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 682 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பான 46 சதவீதத்தில் 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் 168 பேருக்கும் திருவள்ளூரில் 70 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.Corona 3rd wave spreading rapidly in Tamil Nadu ... cluster infection ..!

கடந்த ஒரு வார சராசரி 600 என்று இருந்த நிலையில் இப்போது 870 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் திடீரென்று கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணம் கொத்து கொத்தாக சில இடங்களில் ஏற்பட்ட பரவல் தான் என்றார் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தொற்று கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய் தொற்றுக்கான அறிகுறியே இல்லை. சிலருக்கு லேசான அறிகுறிகள் இருந்துள்ளது. தொற்று உறுதியானவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளிலும், கொரோனா சிறப்பு மையங்களிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள்

.Corona 3rd wave spreading rapidly in Tamil Nadu ... cluster infection ..!

வேலூரில் 39, கன்னியாகுமரியில் 31 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பலியானவர்களில் 2 பேர் வேலூரை சேர்ந்தவர்கள். சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios