Asianet News TamilAsianet News Tamil

பூஜையால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் ஏதற்கு..? வீரமணி கருத்தால் வெடித்தது சர்ச்சை..!

பூஜைகள் செய்தால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் எதற்கு என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

controversy speech veeramani
Author
Tamil Nadu, First Published May 9, 2019, 5:08 PM IST

பூஜைகள் செய்தால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் எதற்கு என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் போதிய மழையின்றி நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மழை வேண்டி திருக்கோயில்களில் வருண பூஜை நடத்த இந்து அறநிலைதுறை உத்தரவிட்டது. இதனையடுத்து பல்வேறு இந்து கோவில்களில் யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு சில தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 controversy speech veeramani

இதனிடையே மழை வேண்டி கோவில்களில் பூஜை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. இதை கி. வீரமணி விமர்சிக்க, பாஜக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.controversy speech veeramani

இந்நிலையில் பூஜைகள் செய்தால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் எதற்கு என்று கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த கருத்தும் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து மத நம்பிக்கைகளை விமர்சிக்கும் கி. வீரமணி பிற மத மூடநம்பிக்கைகளையும் விமர்சிக்க வேண்டும் என்கிற எதிர் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அவ்வப்போது கி. வீரமணி சர்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios