Asianet News TamilAsianet News Tamil

திமுக, பாரத மாதா, மோடி குறித்து மிக கேவலமான பேச்சு.. பாதிரியார் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும் விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30க்கும் மேற்பட்ட புகார்களை அளித்துள்ளனர்.

controversy speech...Case under Section 7 against christian priest
Author
Kanyakumari, First Published Jul 23, 2021, 3:41 PM IST

பாரத மாதா, பிரதமர் மோடி, திமுக குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா;- தமிழகத்தில் திமுக வெற்றிபெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான சேகர் பாபு, தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் குறித்துப் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தின.

controversy speech...Case under Section 7 against christian priest

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்கி வெற்றிபெற்று விட்டு எம்.எல்.ஏ-க்கள் இந்து கோயில்கள்தோறும் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனப் பேசியதுடன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஓட்டுக்கு இரண்டாயிரம் வீதம் கொடுத்து கிறிஸ்தவ நாடார் ஓட்டை வாங்கி வெற்றிபெற்றதாகவும் பேசியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் குறித்தும் சர்ச்சைக்குரிய சில கருத்துகளைப் பேசியிருக்கிறார். பாரத மாதா பற்றி அவர் கூறிய கருத்துகளும் பெரும் சர்ச்சைக்குள்ளாகின.

controversy speech...Case under Section 7 against christian priest

இந்த வீடியோ வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்ததும், ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும் விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30க்கும் மேற்பட்ட புகார்களை அளித்துள்ளனர்.

controversy speech...Case under Section 7 against christian priest

இந்நிலையில்,  ஜார்ஜ் பொன்னையா மீது சட்ட விரோதமாக கூடுதல் , ஜாதி , மதம் மற்றும் இரு தரப்பினர் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு குந்தம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவதூறு பரப்புதல் என 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வருத்து வந்ததால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய பேச்சக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஜார்ஜ் பொன்னையா எதிர்காலத்தில் இதுபோன்று பேசமாட்டோம் என கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios