Asianet News TamilAsianet News Tamil

கொரோனா நன்கொடை இணையளத்தில் முரண்பாடு..! சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்.!!

கொரோனா நிவாரண நிதிக்கு வந்துள்ள மொத்த நிதி எவ்வளவு? எத்தனை பேர் பயனடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களை ஏன் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது என்பது குறித்து பதிலளிக்குமாறு,  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
Controversy over Corona donation website ..! The court that spun the whip. !!
Author
Tamilnadu, First Published May 27, 2020, 11:03 PM IST

கொரோனா நிவாரண நிதிக்கு வந்துள்ள மொத்த நிதி எவ்வளவு? எத்தனை பேர் பயனடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களை ஏன் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது என்பது குறித்து பதிலளிக்குமாறு,  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Controversy over Corona donation website ..! The court that spun the whip. !!

இது குறித்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம், என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில் மார்ச் மாதம் முதல் 38 ஆயிரத்து 849 பரிவர்த்தனைகள் மூலம் 20.47 கோடி ரூபாய் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பத்திரிகைகளில் 306 கோடியே 42 லட்சம் ரூபாய் நன்கொடை வந்து உள்ளதாக செய்திகள் வெளியாகின. முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில், நிதி வழங்கியவர்கள் யார் யார்?பயனாளிகள் யார் யார்? என்பன உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை.எனவே அதன் விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஜூன் 4ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios