Asianet News TamilAsianet News Tamil

NDA கூட்டணியில் இருந்து வெளியேறியதை வரவேற்கிறேன்! என்னுடைய ஆதரவு அதிமுகவுக்கு தான்! பூவை ஜெகன்மூர்த்தி.!

தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. 

Continuing with the AIADMK Alliance ... Puratchi Bharatham tvk
Author
First Published Sep 26, 2023, 1:59 PM IST

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடர்வதாக அக்கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதிமுகவிற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையே உச்சக்கட்ட மோதலை தொடர்ந்து என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அதிமுக நிலைப்பாட்டை கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் வரவேற்றுள்ளது. 

இதுதொடர்பாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும், அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து, தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. 

Continuing with the AIADMK Alliance ... Puratchi Bharatham tvk

அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இயங்கி வரும் நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவிற்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம். அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி, பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும் என்பதை கட்சியின் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். 

Continuing with the AIADMK Alliance ... Puratchi Bharatham tvk

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரதம் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். என்.டி.ஏ - இண்டியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios