Asianet News TamilAsianet News Tamil

தண்டனையில் இருந்து தப்பித்தார் எச்.ராஜா... மன்னிப்பு கேட்டதால் எஸ்கேப்!

நீதிமன்றத்தையும், காவல்துறையை அவதூறாக பேசியதற்காக உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் உணர்ச்சி வேகத்தில் காவல்துறையிடம் தவறாக பேசியதாக எச்.ராஜா வருத்தம் தெரிவித்தார். மன்னிப்பு கோரியதையடுத்து  அவதூறு தண்டனையில் இருந்து எச்.ராஜா தப்பித்தார்.

contempt of court case... Escaped from punishment h.raja
Author
Chennai, First Published Oct 22, 2018, 12:03 PM IST

நீதிமன்றத்தையும், காவல்துறையை அவதூறாக பேசியதற்காக உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் உணர்ச்சி வேகத்தில் காவல்துறையிடம் தவறாக பேசியதாக எச்.ராஜா வருத்தம் தெரிவித்தார். மன்னிப்பு கோரியதையடுத்து  அவதூறு தண்டனையில் இருந்து எச்.ராஜா தப்பித்தார். contempt of court case... Escaped from punishment h.raja

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் விநாயகர் சிலையை கொண்டு செல்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதையும் மீறி விநாயகர் சிலையை எடுத்துச் செல்வோம் என எச்.ராஜா கூற, அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் கடும் கோபமடைந்த எச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல் அதிகாரிகளையும் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.

 contempt of court case... Escaped from punishment h.raja

இதனையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. contempt of court case... Escaped from punishment h.raja

இந்த வழக்கில் தன்னை பற்றி விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று எச்.ராஜா தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா நேரில் ஆஜராகினார். அப்போது நீதிமன்றத்தையும், காவல்துறையை அவதூறாக பேசியதற்காக எச்.ராஜா மன்னிப்பு கோரினார். மன்னிப்பு கோரியதையடுத்து  அவதூறு தண்டனையில் இருந்து எச்.ராஜா தப்பித்தார். மேலும் எச்.ராஜா மன்னிப்பு கேட்டதை அடுத்து அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios