புத்தாண்டு தினத்தில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமே சிறப்பு வழிபாடு நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், அன்றைய தினம் மசூதியில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது என்ற செய்திகளைக் காண முடிவதில்லை.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்து கோவில்கள் இரவு 12 மணிக்கு திறந்து வைப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானதாகும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு தினத்தில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமே சிறப்பு வழிபாடு நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், அன்றைய தினம் மசூதியில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது என்ற செய்திகளைக் காண முடிவதில்லை. பாரம்பரியத்தை இஸ்லாமியர்கள் இன்றும் தொடர்ந்து கடை பிடிக்கிறார்கள். ஆனால் இந்துக்களாகிய நாம் இதை கடைப்பிடிப்பதில்லை. தற்போது நம்முடைய கோவில்களிலும் நள்ளிரவில் நடையைத் திறந்து வழிபாடு, அர்ச்சனை செய்வது சமீபத்தில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு;- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள கோவில்களில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதற்கு தடையில்லை என்றார். ஆனால், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு கோவிலை திறப்பதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்து சமுதாயம் மற்றும் கோவில்களை கிறிஸ்தவ மயமாக்கும் திட்டமிட்ட சதிச்செயலாகும் என எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்து கோவில்கள் இரவு 12 மணிக்கு திறந்து வைப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானதாகும். இது இந்து சமுதாயம் மற்றும் கோவில்களை கிறிஸ்தவ மயமாக்கும் திட்டமிட்ட சதிச்செயலாகும். இந்த இந்து விரோத அரசை கோவில்களிலிருந்து வெளியேற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
