சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையான காவிரி நதி நீர் விவகாரம் குறித்து நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக, சட்டமன்ற காங். தலைவர் கே.ஆர். ராமசாமி, பவுன்குமார், நான் (திருநாவுக்கரசர்) உள்பட பங்கேற்க உள்ளோம் என்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி பிரச்சனையைத் தீர்க்க ஆளும் கட்சி நடத்த வேண்டிய காரியம் இது என்றும் ஆனால், பிரதான எதிர்கட்சியான திமுக அதை செய்து வருவதாகவும் அதை கூறினார். எனவே, கட்சி எல்லைகளைக் கடந்து, இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்தார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ, தனிப்பட்ட கோபதாபங்கள் காரணமாக திமுகவின் அனைத்து கட்சி கூட்ட நடவடிக்கைகளை ஏன் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தின் நோக்கம், தமிழக விவசாயிகளின் நலனுக்காக நடத்தப்படுவதாக தான் கருதுவதாகவும் தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.