சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இதனை கண்டித்து நாளை தி.மு.க. சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சி அமைந்தால் நல்லது. தற்போதைய ஆட்சி நீடிக்குமா? என்பது கோர்ட்டு முடிவின்படி தெரியும்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட 500 கடைகள் இன்னும் மூடப்படாமல் உள்ளது.

அனைத்து மதுக்கடைகளையும் மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இதனை கண்டித்து நாளை தி.மு.க. சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்தித்து வறட்சி நிவாரணமாக ரூ.40 ஆயிரம் கோடியும், வார்தா புயல் நிவாரணமாக ரூ.30 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் 30 பைசா கூட கொடுக்கவில்லை.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, கேரளா மத்திய அரசின் அனுமதியை மீறி தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அணைகள் கட்டி வருகின்றனர். இந்த விவகாரங்களில் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.