Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவில் இணையும் விஜயதாரணி..? அவங்களா போறதுக்கு முன் நீங்களா நீக்கிடுங்க.. வலுக்கும் எதிர்ப்பு குரல்

congress volunteers against mla vijayadharani activities
congress volunteers against mla vijayadharani activities
Author
First Published Feb 12, 2018, 2:57 PM IST


சட்டப்பேரவையில் ஜெயலலிதா பட திறப்புக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த கட்சியின் எம்.எல்.ஏ விஜயதாரணி, முதல்வர் மற்றும் சபாநாயகரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருப்பது அக்கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் இன்று திறக்கப்பட்டது. பேரவை தலைவர் தனபால், ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்துவைத்தார். முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்த விழாவில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், நிர்வாகிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

congress volunteers against mla vijayadharani activities

ஆனால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு பேரவையில் உருவப்படம் அமைக்கக்கூடாது என திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

ஜெயலலிதாவின் பட திறப்பு விழாவை புறக்கணித்த திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். அதனால் அந்த கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக அக்கட்சியின் எம்.எல்.ஏ விஜயதாரணி மட்டும் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பிற்கு ஆதரவு தெரிவித்தார். ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் ஜெயலலிதா முதல்வராக இருந்து மக்கள் பணியாற்றியதால் அவரது படம் அமைவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

congress volunteers against mla vijayadharani activities

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக அந்த விழாவில் கலந்துகொள்ள கூடாது என்பதற்காக விழாவில் கலந்துகொள்ளாதவில்லை என கூறினார் விஜயதாரணி. ஆனால், விழாவிற்கு பின்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் பேரவை தலைவர் தனபால் ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறினார்.

congress volunteers against mla vijayadharani activities

விஜயதாரணியின் இந்த செயல் காங்கிரஸ் கட்சியினரை அதிருப்தியடைய செய்துள்ளது. இப்படியே போனால், விஜயதாரணி அதிமுகவில் இணைந்து விடுவார். அதிமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டுடனே அவர் செயல்பட்டு வருகிறார். பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அரசுக்கு ஆதரவு அளிக்கக்கூட வாய்ப்புள்ளது. எனவே அவர் மீது கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயதாரணிக்கு எதிர்தரப்பினர், கட்சி தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios