congress trick to form government in karnataka
பாஜகவின் ஆட்சியமைக்கும் வியூகத்தை கர்நாடகாவில் அக்கட்சியை வீழ்த்த காங்கிரஸ் பயன்படுத்திவருகிறது.
கடந்த ஓராண்டில் நடந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் பஞ்சாப்பை தவிர, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது. இவற்றில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், குஜராத்தை தவிர மற்ற மாநிலங்களில் மிகக் குறைவான சீட்டுகளை பெற்ற பாஜக, மற்ற கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணி ஆட்சியை அமைத்தது.
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்துடன் செயல்பட்டுவரும் பாஜக, காங்கிரஸை ஆட்சியமைக்க விடாமல் தடுக்க, மற்ற கட்சிகளை இணைத்து ஆட்சியமைத்தது. கோவா, திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் அப்படித்தான் பாஜக ஆட்சியமைத்தது. இவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தும்கூட, அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியவில்லை.
தற்போது அதேபோன்றதொரு நிலை, பாஜகவிற்கு உருவாகியுள்ளது. கர்நாடகாவில் 100க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தாலும், பாஜகவை ஆட்சியமைக்க விடாமல் தடுக்கும் வகையில், காங்கிரஸும் மஜத-வும் கூட்டணி அமைத்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸின் ஆதரவை மஜத தலைவர் தேவெ கௌடாவும் குமாரசாமியும் ஏற்றுக்கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களில் காங்கிரஸை வீழ்த்த பாஜக பயன்படுத்திய வியூகத்தை கர்நாடகாவில் காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது.
