Asianet News TamilAsianet News Tamil

திமுக கூட்டணியிலிருந்து விலகுங்கள்.. வரிசையாக ராஜினாமா செய்யும் நிர்வாகிகள்..கலக்கத்தில் காங்கிரஸ்..

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடிய திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Congress strike to force DMK to withdraw from alliance
Author
Tamil Nadu, First Published May 22, 2022, 12:35 PM IST

முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை காங்கிரஸ்,பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வரவேற்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் , மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என்று வாழ்த்தி வரவேற்றார்.

Congress strike to force DMK to withdraw from alliance

மேலும் விடுதலையை அடுத்து பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர், முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டி அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என்னும் பேச்சு கட்சிக்குள் வலுத்துள்ளது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என்றும் காங்கிரஸ் கட்சி ஒரு ஆளுமையான கட்சி என்றால் திமுக அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும். சித்தாந்த ரீதியாக இந்த சூழ்நிலையை விட காங்கிரஸ் கட்சிக்கு சவாலான சூழல் வேறு எதுவும் இருக்க முடியாது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

Congress strike to force DMK to withdraw from alliance

மேலும் படிக்க: பதவி நலனுக்காக வாய் மூடி வேடிக்கை.!இரட்டை நிலைப்பாட்டில் காங்கிரஸ் தலைவர்கள்.?கிழித்து தொங்க விட்ட ஜி.கே.வாசன்

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற தங்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல மாவட்ட நிர்வாகிகளும் இதனை கண்டித்து ராஜினாமா செய்து வருகின்றனர். நேற்று ராஜூவ்காந்தி நினைவுநாளையொட்டி, ஸ்ரீபெரும்புத்தூர் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்திய, தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி எங்கள் சித்தாந்தம் வேறு. திமுக சித்தாந்தம் வேறும். கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளனை வாழ்த்தியதோடு, மேலும் 6 பேரையும் விடுதலை செய்வோம் என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டிப்பதாகவும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று, தங்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தியும் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோன்று பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினர் தியாகராஜன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். 

மேலும் படிக்க: ராஜீவ் முக்கியமா? ராஜ்யசபா முக்கியமா? காங்கிரசை போட்டு தாக்கும் அண்ணாமலை..!

Follow Us:
Download App:
  • android
  • ios