காங்கிரஸ் தலைவரும், செய்தித்தொடர்பாளருமான ராஜீவ் தியாகி நேற்று டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்த சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் உள்ள வசுந்தரா பகுதியில் உள்ள செக்டர் 16 பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தவாரே தியாகி நேற்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார். இதன் பின்னர் தமது வீட்டில் ஓய்வு எடுத்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற தியாகியின் குடும்பத்தினர், கவுசாம்பியில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு உடனடியாக தியாகியை கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அவரது மறைவுக்கு இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற தியாகியின் குடும்பத்தினர், கவுசாம்பியில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு உடனடியாக தியாகியை கொண்டு சென்றனர்.