எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல், பொதுமக்களுக்கு செம எண்டர்டெயின்மெண்டை அள்ளி வழங்க இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பலமுனை போட்டி, அணிமாறல்கள், உட்கட்சி மோதல்கள், கட்சித்தாவல்கள் என களைகட்டுகிறது தேர்தல்களம்.
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல், பொதுமக்களுக்கு செம எண்டர்டெயின்மெண்டை அள்ளி வழங்க இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பலமுனை போட்டி, அணிமாறல்கள், உட்கட்சி மோதல்கள், கட்சித்தாவல்கள் என களைகட்டுகிறது தேர்தல்களம்.
திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே வேண்டா வெறுப்போடுதான் நீடிக்கின்றன. தனித்து போட்டியிட்டாலே 200 இடங்களைக் கைப்பற்றலாம் என ’ஐபேக்’அள்ளிவிட்டதன் காரணமாக கூட்டணி கட்சிகளை சுமையாகத்தான் திமுக கருதி வருகிறது. அதிலும் காங்கிரஸ் மீது கொஞ்சமும் நல்லெண்ணம் இல்லை. பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரசை கழற்றிவிட்டால் என்ன என்கிற முடிவுக்கு திமுக வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் நாமாக கழற்றிவிட்ட மாதிரி இருக்கக் கூடாது; அந்தக் கட்சியே தானாக பிரிந்து செல்வது மாதிரி இருக்க வேண்டும் என கணக்குப் போட்டு, அதற்கேற்ப காய்நகர்த்தி வருகிறது திமுக. இதன் காரணமாகவே தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சமீபத்திய சந்திப்பின்போது இடப்பங்கீடு பற்றி பலமுறை வலியுறுத்தியும் ஸ்டாலின் கொஞ்சமும் பிடிகொடுக்கவில்லையாம். தொலைபேசி வாயிலாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதே கோரிக்கை பற்றி பேசியபோதும் ஸ்டாலின் இறங்கிவரவில்லை என்கிறார்கள்.
அத்துடன் கூட்டணி தொடர்பாக கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் உதயநிதி உள்ளிட்டோர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவரும் செய்தியும் காங்கிரஸ் தரப்பை எட்டியிருக்கிறது. இதனால் கதர்ச்சட்டை வட்டாரங்களில் உச்சக்கட்ட அனல் வீசுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘’தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச காலமே உள்ளதால் இடங்களை உறுதி செய்வது மிகவும் அவசியம். அப்போதுதான் வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டு பிரசாரத்தில் இறங்க முடியும். இந்த அடிப்படையிலேயே சீட்டு பங்கீடு பற்றி எங்கள் கட்சியினர் திமுகவிடம் கேட்டனர். இதற்கு பொறுப்பான பதிலை தந்திருக்க வேண்டிய திமுக இழுத்தடிக்கிறதென்றால் அவர்களின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. கடைசி நேரத்தில் கழுத்தறுப்பது என்கிற திமுகவின் திட்டத்தை எங்கள் தலைவர்கள் உணர்ந்துவிட்டனர்.
இதன் எதிரொலியாக புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக தினகரனின் அ,ம,மு.க உள்ளிட்ட சில கட்சிகளுடன் நாங்களும் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறோம். தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் ஒருசில கட்சிகள் கூட எங்களின் புதிய அணியில் இடம்பெற நிறைய வாய்ப்புகள் உள்ளன. எங்களின் இந்த அதிரடி வியூகம் திமுகவின் ஆட்சி கனவுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்’’என்கிறார்கள்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 26, 2020, 1:32 PM IST