Asianet News TamilAsianet News Tamil

’என்னை சார்னு கூப்பிடாதீங்க... பெயரை சொல்லி கூட்டால் போதும்...’ மாணவிகளிடம் நட்பான ஹாய் ராகுல்..!

பாலின சமத்துவத்தில் வடமாநிலங்களை காட்டிலும், தென் மாநிலங்கள் சிறந்த அளவில் உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

congress president rahul gandhi speech in college
Author
Chennai, First Published Mar 13, 2019, 12:59 PM IST

பாலின சமத்துவத்தில் வடமாநிலங்களை காட்டிலும், தென் மாநிலங்கள் சிறந்த அளவில் உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.  

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் என் மனதில் உள்ள கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். சுலபமான கேள்விகளை தவிர்த்து கடினமான கேள்விகளை கேளுங்கள் என்று கூறினார். என்னுடைய கொள்கை எப்போதுமே பரந்து விரிந்த மனப்பான்மையை சார்ந்தது என்றார். congress president rahul gandhi speech in college

தொடர்ந்து மாணவிகளை கேட்கும்படி கேட்டுக்கொண்ட ராகுல், என்னை சார் என அழைக்க வேண்டாம். ராகுல் என்று அழைத்தால் கேள்விகளுக்கு பதிலளிக்க வசதியாக இருக்கும். இதனையடுத்து அந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள் ஒருவர் எழுந்து ஹாய் ராகுல் என அழைத்தார். உடனே அங்கு கூடியிருந்த மாணவிகள் கோஷங்களை எழுப்பினர். மேலும் மாணவிகள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

மேலும் மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு அதிகம் பணம் செலவழிக்க வேண்டி உள்ளது. ஆனால் இந்தியா குறைந்த அளவிலேயே செலவிடுகிறது. பெண்கள் எப்படி நடத்த வேண்டும் என்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.

 congress president rahul gandhi speech in college

தனியார் ஆனாலும், அரசு துறையானாலும் பெண்களுக்கு போதிய இடம் அளிக்கப்படவில்லை. எவ்விதத்திலும் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios