காங்கிரஸ் கட்சி - சீனா இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியுள்ளதாக பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய நட்டா, ‘’கடந்த 2017 ம் ஆண்டில், டோக்லாமில் இந்தியா - சீனா படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டில்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். தற்போது, கல்வானில் நடந்த மோதலின் போதும் நாட்டை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது.

கடந்த 2005 - 06 ம் ஆண்டில் சீனாவும், சீன தூதரகமும், ராஜிவ் அறக்கட்டளைக்கு 300 ஆயிரம் அமெரிக்க டாலர் நிதி வழங்கியுள்ளது. இதுதான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையே ரகசிய ஒப்பந்தம்’’ என அவட் தெரிவித்தார். சீனா - இந்தியா எல்லையில் போர்ப்பதற்றம் சூழந்துள்ள நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை ராகுல்காந்தி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் சீனாவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ஜே.பி.நட்டா குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.