congress offer to mjb in karnataga election

கர்நாடாகவில் கடந்த 14ஆம் தேதி சட்டமன்ற 222 தொகுதிகளுக்கு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 40 மையங்களில் இன்று காலை எட்டு மணிமுதல் தொடங்கியது.

தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. அதன்பின் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. பின் காங்கிரஸ் மற்றும் மத்திய ஜனதா தளம் இரண்டின் முன்னிலையை விட பா.ஜ.க முன்னிலை வகித்தது.

இந்நிலையில் பா.ஜ.க 112 தொகுதில் வென்றால்தான் தனிப்பெரும்பாண்மை கிடைக்கும். தற்போது வரை பா.ஜ.க பெறாதாதால் கர்நாடகத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் 78தொகுதியிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதியிலும் முன்னிலையில் இருப்பதால் காங்கிரஸ் தலைமை குலாம் நபி ஆசாத் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மஜதாவின் தலைவர் தேவகவுடாவின் மகனான குமாரசாமிக்கு முதல்வர் பதவியும் அமைச்சரவையில் 14 இடங்கள் தருவதாக ஒப்புக்கொண்ட்ட்து. காங்கிரஸ் கொடுத்த இந்த ஆஃபரில் மனம் குளிர்ந்த தேவகவுடா உடன்படிக்கையை ஒப்புக்கொண்டார். அமைச்சரவையில் காங்கிரஸ்க்கு 18 இடங்களும் துணைமுதல்வர் பதவியும் கிடைக்கும் எனத் தெரிகிறது..

37 தொகுதிகளும் 3 உதிரிகளையும் கொண்டே தேவகவுடா ஆட்சியை பெற்றுள்ளார். அரசியல்ல என்ன வேணாலும் நடக்கும்ங்க