Asianet News TamilAsianet News Tamil

ராஜினாமா செய்வதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட குஷ்பு... தலைமை அதிரடி..!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Congress national spokesperson Kushboo removed
Author
Tamil Nadu, First Published Oct 12, 2020, 10:17 AM IST

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களாக டுவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுக  முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு வாழ்த்து சொல்வதில் எந்த தவறும் இல்லை எனவும் அவர் கூறி வந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களாக நடிகை குஷ்பு, பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி பரவியது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றுவிட்டு திரும்பிவந்த நடிகை குஷ்பு, நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென அவசரம் அவசரமாக டெல்லி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார். அப்போது நடிகை குஷ்புவிடம் செய்தியாளர்கள் நீங்கள்  பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வருகிறதே உண்மையா? என்று கேட்டனர். அதற்கு அவர், கருத்து சொல்ல விரும்பவில்லை (நோ காமண்ட்ஸ்) என பதில் அளித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு அதிரடியாக நீக்கப்படுவதாக பிரணவ் ஜா அறிவித்துள்ளார். பாஜகவில் இணைய டெல்லி சென்ற நிலையில் குஷ்பு மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்புவும் அறிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios