Asianet News TamilAsianet News Tamil

நடிகர் சோனு சூட் சகோதரிக்கு சீட்... அதிருப்தியில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ..!

சோனு சூட்டின் சகோதரி என்பதைத் தவிர, மாளவிகாவுக்கு எந்த அரசியல் தகுதியும் இல்லை என்றும் கூறினார்.
 

Congress MLA Harjot Kamal joins BJP after Sonu Sood's sister Malvika fielded from his seat
Author
Punjabi Bagh, First Published Jan 16, 2022, 12:57 PM IST

பஞ்சாப் தேர்தலில் நடிகர் சோனு சூட்டின் சகோதரியை மோகா தொகுதியில் நிறுத்தும் காங்கிரஸின் முடிவால் அதிருப்தி அடைந்த அத்தொகுதி எம்எல்ஏ ஹர்ஜோத் கமல் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்தார். சண்டிகரில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் கமல் காவி கட்சியில் இணைந்தார். பஞ்சாபில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு மார்ச் 10ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்.Congress MLA Harjot Kamal joins BJP after Sonu Sood's sister Malvika fielded from his seat

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூத் மோகா உள்ளிட்டோர் தொகுதியில் போட்டியிடும் 86 வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.  கட்சி சீட் கொடுக்க மறுத்ததால் அதிருப்தி தெரிவித்ததோடு, சோனு சூட்டின் சகோதரி என்பதைத் தவிர, மாளவிகாவுக்கு எந்த அரசியல் தகுதியும் இல்லை என்றும் கூறினார்.

முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் சாஹிப்பில் இருந்தும், கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் (கிழக்கு) தொகுதியிலிருந்தும் போட்டியிடுகின்றனர். துணை முதல்வர்கள் சுக்ஜிந்தர் ரந்தாவா மற்றும் ஓம் பிரகாஷ் சோனிக்கு முறையே தேரா பாபா நானக் மற்றும் அமிர்தசரஸ் (மத்திய) தொகுதிகளில் இருந்து சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மான்சா தொகுதியில் போட்டியிடுகிறார்.Congress MLA Harjot Kamal joins BJP after Sonu Sood's sister Malvika fielded from his seat

ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), பாஜக மற்றும் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் புதிய கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் ஷிரோமணி அகாலிதளம் ஆகியவை மாநிலத்தில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகள். பஞ்சாபில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முனைந்துள்ள நிலையில், காங்கிரசை வீழ்த்த பாஜகவும், அமரீந்தர் சிங்கின் கட்சியும் இணைந்து போராடி வருகின்றன. ஆம் ஆத்மி மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளும் மாநிலத்தில் ஆட்சிக்கு வர முனைகின்றன

.Congress MLA Harjot Kamal joins BJP after Sonu Sood's sister Malvika fielded from his seat

2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் 77 இடங்களில் வெற்றி பெற்றது, அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. பிஜேபி வெறும் 3 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios