வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேனு சொல்லு.. டிஸ்சார்ஜ் ஆகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. எப்போது தெரியுமா?
கடந்த 15ம் தேதி ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதை அடுத்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஈவிகேஎஸ். இளங்கோவன் சுமார் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து அவர் மீண்டு விட்டதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நான் நலமுடன் இருக்கிறேன். சீக்கிரமா வீடு திரும்புவேன் என்று ஈவிகேஎஸ். இளங்கோவன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது அக்கட்சியி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.