புதுச்சேரி மாநிலம் காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான காமராஜ் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
Add Asianetnews Tamil as a Preferred Source

இந்த தொகுதி வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் முதல் மூன்று சுற்றிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.
ஜான்குமார் 3919 வாக்குள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 2092 வாக்குகள் பெற்றுள்ளார்
