கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை சமாளிக்க நிதி வேண்டுமானால் நாட்டின் செலவினங்களை பாதியாக குறைக்க வேண்டும் என காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ,  பிரதமர் மோடி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தொலைபேசியில் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்திய  நிலையில் சோனியா காந்தி இந்த அறிவுரை வழங்கியுள்ளார் .  நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் இந்தியாவில்  இந்த வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை  5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 கடந்துள்ளது .  இதனால்  இந்திய மக்கள் மிகுந்த அச்சத்தில் உரைந்துள்ளனர்.  இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன, 

 

அதன் ஒரு பகுதியாக  கொரோனா வைரசை எதிர்கொள்ள தேவையான பொருளாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மத்திய அரசு கவனம் செலுத்திவருகிறது.  அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுதி நிதிகளை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வதுடன்,  அவர்களது ஊதியத்தை பிடித்தம் செய்யவும்  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது .  இந்நிலையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு  பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ,  இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து பிரதமர் இன்று வீடியோகான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார் .  டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவருமான சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார் , அதில், 

 மிகவும் இக்கட்டான நேரத்தில் சிக்கன நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமான மேற்கொள்ள வேண்டியது அவசியம்,  சம்பளம் ஓய்வூதியம் மற்றும் மத்திய துறை திட்டங்களை தவிர்த்து செலவினங்களை 30 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  25 ஆயிரம் கோடி ரூபாய் பொருட் செலவில் புதிதாக கட்டப்பட உள்ள  நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார் .  அதேபோல் மத்திய அமைச்சர்கள் மாநில முதலமைச்சர்கள் அரசு அதிகாரிகளின்  வெளிநாட்டுப் பயணங்களையும் அடுத்த சில ஆண்டுகளுக்கு  ரத்து செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  அதே நேரத்தின் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிபிடத்தக்கது.