புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு புதுச்சேரி அரசு சார்பில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக இடம்தேர்வு சிலை வடிவமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து முடிவெடுக்க முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் இன்று சட்டபேரவை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறைந்த முதல்வர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த காலத்தில் தமிழகத்திற்கு கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம். அந்த திட்டங்கள் அனைத்தும் சிறுபான்மையினர் மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரிதும் உதவியாக இன்றளவும் உள்ளது. கட்சி பேதமின்றி அனைத்து கட்சியினரும் பாராட்டும் அளவிற்கு அவர் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் அமைந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு.108 ஆம்புலன்ஸ் இலவச மின்சாரம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்...

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையில் காலமானார் என்பது குறிப்பிடதக்கது.