காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு திடீர் மரணம் ! கொலை செய்யப்பட்டரா ? அதிர்ச்சி தகவல் !!
செக் மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. திடீரென மாரணமடைந்தார். சொத்துக்காக அவரது மகனே அன்பரசுவை கொலை செய்து விட்டதாக அவரது மகள் குற்றம்சாட்டியிருப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2002ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கல்வி அறக்கட்டளை சார்பில் அன்பரசு 35 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவர்கள் கொடுத்த காசோலை, கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விட்டது, எனவே காசோலை மோசடி சட்டத்தின் கீழ் அன்பரசு மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்
.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் 8ஆவது பெருநகர மாஜிஸ்திரேட், அன்பரசு, அவரது மனைவி கமலா மற்றும் அறக்கட்டளை நிர்வாகி மணி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அன்பரசு மேல்முறையீடு செய்திருந்தார். ஆனாலும் கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதி செய்துது.
இந்நிலையில் அன்பரசு உடல்நலக்குறைவு காரணமாக பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
இதனிடையே அன்பரசுவின் மகன் சொத்துக்காகவும் வழக்காகவும் அன்பரசுவை கொலை செய்ததாக அக்கா சுமதி அன்பரசு குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக அன்பரசுவை அவரது மகன் வீட்டில் அடைத்து வைத்து யாரையும் பார்க்க விடாமல் கொடுமைப்படுத்தியதாகவும் சுமதி குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்