வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி. தேர்தல் அறிவிப்பில் வெளியாகி உள்ள சில முக்கிய திட்டத்தில், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற கூடிய சில திட்டங்கள் இதோ..!
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி. தேர்தல் அறிவிப்பில் வெளியாகி உள்ள சில முக்கிய திட்டத்தில், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற கூடிய சில திட்டங்கள் இதோ..!
அதன் படி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் மாநில அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடாதது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், முன் நிபந்தனை எதுவுமின்றி காஸ்மீர் தொடர்பான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், 'நியாய்' எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், 2030 ஆம் ஆண்டுக்குள், நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் என்றும், தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு விடப்பட்டு உள்ளது.
இதே போன்று, அரசு தேர்வுகளுக்கான கட்டணம்,விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும், மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால், முட்டை வழங்க ஆயத்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

மிக முக்கியமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வியும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை தொழிற்கல்வி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என்றும் கூறப்பட்டு உள்ளது. நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள 33 % இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்கபப்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி குள் கொண்டுவரப்படும். ஒரு சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு மற்றும் பெரும் மாற்றத்தை கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தீர ஆராய்ந்து மக்கள் எதிர்பார்க்கும் சில முக்கிய திட்டங்களை பற்றி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளது காங்கிரஸ்.
