Congress criticized rajnathsingh

ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்திருந்தார். சிக்கீமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் மக்களும் ஜம்மு காஷ்மீரும் நமக்குச் சொந்தம் என்பதால், மத்திய அரசு இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்கவிக்கும் நிலைப்பாட்டை பாகிஸ்தான் மாற்றிக் கொள்ளவில்லை என்றால், வலுக்கட்டாயமாக மாற்றுவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்..

இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்த ராஜ்நாத்சிங்கின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ, "ஜம்மு காஷ்மீரில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பா.ஜ.க.வும். மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட்டணி அமைத்தாலும் ஜம்மு காஷ்மீர் உதவியின்றியே காணப்படுகிறது."