கடந்த2005- 2006 ஆம் ஆண்டு காலத்தில் சீன அரசிடம் இருந்தும், சீன தூரகத்திடம் இருந்தும் 3 லட்சம் அமெரிக்க டாலர்களை ராகுல் காந்தி அறக்கட்டளை பெற்றுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் நட்டா குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்தியா சீனா எல்லைக்கு இடையே 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்களை சீனா ராணுவ வீரர்கள் வம்புக்கு இழுத்து கற்களாலும் இரும்பு முள் கம்பிகளாலும் தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேரும் சீன வீரர்கள்35போரும் வீர மரணம் அடைந்தார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பே சீன ராணுவம் லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் ஊடுருவி விட்டார்கள் இது கூட தெரியாமல் மத்திய அரசு இருக்கிறது. மத்திய பாதுகாப்பு உளவுத்துறையும் மோசமாக இருக்கிறது என்று வறுத்தெடுத்திருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
இந்திய சீனா ராணுவ மோதல்கள் குறித்த உண்மை நிலையை இந்திய அரசு வெளியில் சொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார். 


நட்டாவும் ப.சிதம்பரமும் ட்விட்டரில் கடுமையாக மோதி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ட்விட்டரில் ப.சிதம்பரம் ."2015ம் ஆண்டு முதல் 2264 சீன வீரர்கள் ஊடுருவல்களை பற்றி பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க நட்டாவிற்கு துணிச்சல் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இன்று ஜேபி நட்டா காங்கிரஸ் கட்சிக்கும் சீனாவுக்கு ரகசிய உறவுஇருக்கிறது என்று புதிதாக குண்டை வீசியிருக்கிறார். அதில்.கடந்த2005- 2006 ஆம் ஆண்டு காலத்தில் சீன அரசிடம் இருந்தும், சீன தூரகத்திடம் இருந்தும்
3 லட்சம் அமெரிக்க டாலர்களை ராகுல் காந்தி அறக்கட்டளை பெற்றுள்ளது.இது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இவையே காங்கிரஸ் கட்சிக்கும் சீனாவுக்கும் ரகசிய உறவு என அவர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் என்ன பதில் சொல்லப்போகிறது.