Asianet News TamilAsianet News Tamil

மோடி பக்கம் சாயும் காங்கிரஸ் முதல்வர்! ராகுலுக்கு கல்தா:

காங்கிரஸுக்கு உண்மையிலேயே தன்மானம் இருந்தால் நாங்குநேரி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு பார்க்கட்டும்:    ஜெயக்குமார். 

Congress Chief minister takes stand in favour of Modi
Author
Chennai, First Published Sep 10, 2019, 7:13 PM IST

*    காங்கிரஸுக்கு உண்மையிலேயே தன்மானம் இருந்தால் நாங்குநேரி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு பார்க்கட்டும்:    ஜெயக்குமார். 
(ஓ.கே. அதுக்கு அவிய்ங்க என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்ணே. அதேநேரத்துல ‘அ.தி.மு.க.வுக்கு உண்மையிலேயே தன்மானம், ரோஷம் இருந்தால், மக்கள் நலனுக்கு எதிரான ஒரு விஷயத்துல பா.ஜ.க.வை எதிர்த்து ஒரு அறிக்கை கொடுக்க சொல்லுங்க பார்ப்போம்.’ன்னு அவிய்ய்ங்ங்க சொன்னாக்க நம்ம நிலை என்னாகும்ணே?)

*    கடந்த ஐம்பது ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி இந்தியாவை அழகான ஆடையாக பின்னி வைத்திருந்தது. ஆனால் அதை பா.ஜ.வினர் கிழித்துவிட்டார்கள்:     கே.எஸ்.அழகிரி

(அழகான ஆடையில சிறுசும், பெருசுமா ஊழல் ஓட்டைகளும், கறைகளுமா பண்ணி வெச்சிருந்துச்சே காங்கிரஸ் அதை எந்த சோப்பு போட்டும்  கழுவ முடியலை, எந்த ஊசிய வெச்சும் தைக்க முடியலையே தலைவரே!?)

*    அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு அறைகளில் கேமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளிலும் கேமெராக்கள் பொருத்த நிதி தேவைப்படுவதால் அது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்:    செங்கோட்டையன். 
(கேமெரா பொருத்திட்டீங்க சரி. அது ஒர்க் ஆகுறதுக்கு கரண்டு வேணுமே தலைவரே?! வளர்ந்த புள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ல டாய்லெட் உருப்படியா கிடையாது, குடிக்க தண்ணீர் கிடையாது, பல வருஷமா பலர் குரல் கொடுத்துட்ட நாஃப்கின் வசதி கிடையாது. ஆனா கேமெரா?.....க்க்க்க்க்கும்)

*    பசுக்கள் பாதுகாப்புதான் எங்கள் அரசின் முக்கிய நோக்கம். ‘கோமாதா’ என வணங்கப்படும் பசுக்கள்தான், எங்களின் உண்மை மற்றும் பெருமையின் அடையாளமாக திகழ்கின்றன. அவற்றை பாதுகாக்க மாநிலம் முழுவதும் ஆயிரம் கோசாலைகள் எனப்படும் பசுக்கள் பராமரிப்பு மையங்களை துவக்க உள்ளோம்:    ம.பி. காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்
(காங்கிரஸ் முதல்வரான இவர் பேசுனா நம்மாளுங்க கண்டுக்க மாட்டாங்க. ஆனா இதையே ஒரு பா.ஜ. கவுன்சிலர் பேசியிருந்தாலும் போதும் இந்நேரம் நாட்டுல பாதியை எரிச்சிருப்பாங்க.)

*    அசாமில் மட்டுமல்ல நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறி உள்ளவர்கள் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள்:    அமித்ஷா
(தல, நீங்க இப்படி சொல்றதைப் பார்த்துட்டு வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுல வந்து கூலி வேலைக்கு தஞ்சம் புகுந்திருக்கிறவங்களை  ‘அமித்ஜியே சொல்லிட்டாரு’ன்னு அடிச்சு துவைச்சு விரட்டி விடப்போறாங்க.)
-    விஷ்ணுப்ரியா

Follow Us:
Download App:
  • android
  • ios