ஈரோடு இடைத்தேர்தல்..! திட்டமிட்டபடி வேட்புமனு தாக்கல் செய்த ஈவிகேஎஸ்.! பின் வாங்கிய அதிமுக
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த காங்கிரஸ் மற்றும் அதிமுக திட்டமிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

ஈரோடு தேர்தல்- வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா திடீர் மரணம் காரணமாக அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட கடந்த மாதம் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் நேற்று வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து இன்றைய தினம் அதிமுக வேட்பாளர் தென்னரசு மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஈவிகேஎஸ் வேட்புமனு தாக்கல்
இந்தநிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினர். அப்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரு தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன்காரணமாகவும் இன்று அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி அதிமுக மூத்த தலைவர்கள் சென்னையில் இருப்பதாலும் இன்று தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்த வேட்பு மனுதாக்கல் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்