கொரோனா பெருந்தொற்றால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஈடுசெய்ய, சீனாவுடன் நட்பு பாராட்டும் காங்கிரஸ், சீனாவிடமிருந்து பணத்தை மீட்டெடுக்க முடியுமானால் அதிக வரி விதிக்க வேண்டிய அவசியம் வராது என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 2021-2022 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் மீது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வரவேற்றி விளக்கமாக அவர் ஆற்றிய உரை பின்வருமாறு: 

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட் சிறப்பு மிக்க பட்ஜெட்,  இதை குறை சொல்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை, உலகமே பொருளாதார நெருக்கடியில் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான பட்ஜெட்டாக இதை பார்க்கிறேன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியினர், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது,  நாட்டையே பாஜகவினர் பாதாளத்தில் தள்ளி விட்டனர் என கதறினர், ஆனால் அரசு மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்து, கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைப்  பாதுகாத்துக் கொண்டே, இந்திய பொருளாதாரத்தையும் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகரத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உண்மையிலேயே இந்திய பொருளாதாரத்தை மிக மோசமாக தாக்கியது, ஒரு இயற்கை பேரிடரின்போது இது போன்ற சூழல் ஏற்படுவது வழக்கம்தான். 

கொரோனா காலத்தில் 15 முதல் 18 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதாவது -7 சதவீதம் பொருளாதார இழப்பு ஏற்பட்டது, இந்த 18 லட்சம் கோடி இழப்பிற்கு எந்த மாநில அரசோ, எந்த மத்திய அரசோ காரணாமாக இருக்க முடியாது,  இந்த ஒட்டுமொத்த இழப்பிற்கும் காரணமும் சீனாவிலிருந்து வந்த வைரஸ் தான் காரணம். ஆனால்  இந்தப் பொருளாதார இழப்பை சரி கட்டுவதற்கான மூல ஆதாரத்தையும், அதற்கான வழிகளையும் அரசு அடையாளம் கண்டுள்ளது. ஆனால் இந்த கொரோனா நெருக்கடியில், சீனா உட்பட எல்லா நாடுகளுமே பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன என்பதை சொல்லிக்கொள்கிறேன்.  இந்த பட்ஜெட் 2 முக்கிய சிறப்புகளைப் பெற்றுள்ளது, 1. வளர்ச்சி மற்றொன்று வேலைவாய்ப்பு, இந்த நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு மறைமுக மற்றும் நேரடி வரி விதிப்புகளை செய்துள்ளது. அது பொருளாதார வளர்ச்சிக்கான நல்ல அறிகுறியே காட்டியுள்ளது, வருங்காலத்தில் இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏன் இந்த பட்ஜெட் ஒரு லேண்ட்மார்க் பட்ஜெட் என்றால்,  இந்த பட்ஜெட் வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதே அதற்கு காரணம். 

மொத்தம் ஏழு வகையான சிறப்புகளை இந்த பட்ஜெட் பெற்றுள்ளது: 1 வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு பொருளாதார முதலீடு. 2. உட்கட்டமைப்பை வலுப்படுத்த பொருளாதாரம் முதலீடு,  3. அரசு தனது செயல்படும் திறனை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம், 4. உற்பத்தியை அதிகரித்தல், 5. மக்கள் நல வாழ்வில் கவனம் செலுத்துதல், மக்கள் நல வாழ்வு என்றால் சாதாரண நலவாழ்வு அல்ல  பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய நலவாழ்வு,  இந்த மிகப்பெரிய நோய்த்தொற்று மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதே இதற்கு காரணம். 6. இந்த பட்ஜெட் மிகவும் வெளிப்படையானது, ஏன் இந்த அரசு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் முதலீடு செய்கிறது

மோடி அரசு தனது கடந்த முதல் 5 ஆண்டில், நாட்டின் நிதி கேந்திரத்தை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் என அனைத்தையும் தயார்படுத்தி வைத்திருந்தது, ஆனால் அது அனைத்தையும் கொரோனா என்ற இந்த பெரும் தோற்று நாசமாக்கி விட்டது. நேற்று பேசிய கபில்சிபல் அவர்கள் கூறினார்,  பாஜக எதையுமே செய்யவில்லை, எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை என கூறினார். அதற்கு நான் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கூறுகிறேன், மோடி தலைமையிலான அரசு கடந்த  2019ஆம் ஆண்டில் மட்டும் தேசிய அளவிலான திட்டங்களான பைப்லைன் திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு என  1.2  லட்சம் கோடி ரூபாய்  அளவிற்கு  நிதி ஒதுக்கி சுமார் 217 திட்டங்களை நிறைவு செய்திருக்கிறது. இதுதான் இந்த அரசின் செயல் நடவடிக்கை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். 

2014ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது நல்வாழ்விற்காக 27 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் இப்போது 2.35  லட்சம் கோடி மக்கள் நல வாழ்வை உறுதி செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  எந்த மாதிரியான தொற்று நோய்கள் வந்தாலும் அதை எதிர்த்து சமாளிக்க கூடிய வகையில் நாட்டு மக்களை இந்த அரசு பாதுகாக்கும், அதில் இருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்தியா இப்போது தயாராக உள்ளது.

அதேபோல் இந்த பட்ஜெட் எப்படி வெளிப்படையானது என்பதற்கான ஒரு உதாரணம் கூறுகிறேன்,  ஒரு ரூபாய் என்றாலும் கூட அது எப்படி வந்தது அது எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த நாட்டிற் குடிமகன் என்பதை எண்ணி பெருமை அடைகிறேன். மொத்தத்தில் கொரோனாவால்  18 லட்சம் கோடி நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது, இது உண்மையிலேயே இழப்புதான், " நான் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் சீனாவிடம் நெருக்கமாக இருக்கும் காங்கிரஸாரிடம் கேட்கிறேன்,  சீனாவிடமிருந்து இந்த 18 லட்சம் கோடியை திரும்பக் கொண்டுவருவதற்கான வழியை நீங்கள் கண்டுபிடியுங்கள் "இந்த வைரஸ் சீனாவில் இருந்து வந்தது,  நீங்கள்தான் சீனாவிடம் நெருக்கமாகவும், நண்பர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் உங்கள் சீன நண்பர்களிடம் பேசி இந்தியாவின் இழப்பை ஈடு செய்யலாமே.?  நீங்கள்தான் அவர்களுடன் நட்பு பாராட்டுகிறார்கள்,  நீங்கள்தான் அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். 

தனியாருக்கு விற்கக் கூடாது என சொல்லும் காங்கிரஸ் காலத்தில்தான் பொது மக்களுடைய வரிப் பணத்தை எடுத்து தனியாருக்கு கொடுக்கப்பட்டது,  2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல்,  என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கொரோனா நெருக்கடி காலத்தில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க களத்தில் நின்ற ஒவ்வொருவரையும் வணங்கி விடைபெறுகிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.