பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, 2015 முதல் 2264 சீன ஊடுருவல்களை விளக்குமாறு பிரதமரிடம் கேட்கத் துணிச்சல் உள்ளதா? என காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். 


பிரதமர்  மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அவர் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் எப்போதும் தனது வார்த்தைகளின் தாக்கம் அறிந்து கவனமாக பேச வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் லடாக் மோதல் குறித்து எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பதிவில், "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2010 முதல் 2013 வரை நடந்த 600 சீன ஊடுருவல் குறித்து விளக்குமாறு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெ.பி.நட்டாவுக்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில்.. "ஆம் ஊடுருவல் இருந்தது. ஆனால், இந்திய எல்லைகள் சீனாவால் ஆக்கிரமிக்கப்படவில்லை, மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 


 தயவு கூர்ந்து, 2015 முதல் நிகழ்ந்த 2264 சீன ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் விளக்குமாறு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்ப வேண்டும். அவருக்கு அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு துணிச்சல் கிடையாது என்று சவாலாக கூறுகிறேன்" என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.