Asianet News TamilAsianet News Tamil

தடுப்பூசி போடாதவர்களுக்கு கட்டாய விடுப்பு.. கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறை.

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும்.மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.

Compulsory leave for those who have not been vaccinated. As colleges open, the guideline protocol.
Author
Chennai, First Published Aug 24, 2021, 9:16 AM IST

செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டது. செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், அதற்கு ஒரு வார காலத்துக்கு முன்பே கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்தி, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Compulsory leave for those who have not been vaccinated. As colleges open, the guideline protocol.

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும். மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.தடுப்பூசி போடாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்.தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

Compulsory leave for those who have not been vaccinated. As colleges open, the guideline protocol.

மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை.நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் RT-PCR சோதனை எடுக்க வேண்டும். நுழைவாயில்களில் கண்காணிப்பு குழு அமைத்து வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று சரிபார்க்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் கப், தேநீர் கப், டயர்கள், விஷ ஜந்துகள் அடையும் இடங்கள் ஏதும் இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios