தினம் தோறும் கூறப்பட்டு வரும் புகார்களை தொடர்ந்து மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகிகள் ஒரு சிலரை நீக்க நடிகர் ரஜினி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் 31ந் தேதி அரசியல் கட்சி துவங்க உள்ளதாக ரஜினி அறிவித்தார். அதனை தொடர்ந்து அவரது ரசிகர் மன்றத்தின் பெயர் மக்கள் மன்றமானது. பின்னர் தலைமை கழக நிர்வாகிகளாக சுதாகரும், ராஜூ மகாலிங்கமும் நியமிக்கப்பட்டனர். இவர்களில் சுதாகர் ரஜினியின் நண்பர். ராஜு மகாலிங்கம் லைக்கா நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்து மக்கள் மன்றத்தில் இணைந்து மாநிலச் செயலாளர் பதவியை பெற்றவர்.