Asianet News TamilAsianet News Tamil

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!

கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊடரங்கு அமல்படுத்தப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

complete lockdown 4 Districts...cm Edappadi Palanisamy Announcement
Author
Tamil Nadu, First Published Jun 15, 2020, 3:36 PM IST

கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊடரங்கு அமல்படுத்தப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவ குழு தளர்வுகள் செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவகிறது. ஆகையால், சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  முழு ஊரடங்கு அமல்படுத்த முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறினர்.

complete lockdown 4 Districts...cm Edappadi Palanisamy Announcement

இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் அமைச்சர்களுடன் இதே கருத்து முன்வைத்தனர். இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊடரங்கு அமல்படுத்தப்படுகிறது என முதல்வர் அறிவித்துள்ளார். 

complete lockdown 4 Districts...cm Edappadi Palanisamy Announcement

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கும். மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோ, வாடகை கார்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 33 சதவீதம் பணியார்களுடன் மட்டும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios