பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் 
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக இருக்கும் நாகராஜ் செல்லதுரையின் அவருக்கு சொந்தமான 5 நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜூலை 16  17 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 180 கோடி ரூபாய் பணம் மற்றும் 105 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 16.05.2011 முதல் 13.02.2017-ம் ஆண்டு வரை நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி 7 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தார். தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி 14.2.2017-ம் ஆண்டு பதவியேற்றார். ஆனால் நெடுஞ்சாலை துறை பதிவியும் தன் வசமே தக்க வைத்து கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரின் சம்மந்தி பி.சுப்பிரமணியன் மற்றும் நாகராஜன் செல்லத்துரை சட்டவிரோதமாக ஆதயம் அடைந்துள்ளார்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த மீதும் அதில் தொடர்புடையவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றார். ஆளுநர் நடவடிக்கை எடுக்கவிட்டால் நீதி மன்றத்தை நாடுவோம். இதை தவிர்த்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அமைச்சர்கள் மிகபெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஜெயகுமார் கேள்விக்கு பதில் அளித்த திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் திமுக ஆட்சி காலத்தில் டெண்டர்கள் கொடுக்கப்பட்டது ஆனால் மாமனார், மாமியாருக்கு தரவில்லை என்று கூறினார்.