Asianet News TamilAsianet News Tamil

பிடியில் சிக்கிய விஜய்பாஸ்கர்..? அமைச்சர்களின் மீதான அடுத்த அம்பு..?

14 கோடி ரூபாய் மோசடி புகாரில் முன்னாள் சுகாதாரதுறை அமைச்சர் விஜய்பாஸ்கரிடம் கொச்சி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Complaint against Ex Minister Vijayabaskar
Author
Kerala, First Published Nov 29, 2021, 4:29 PM IST

சமீபத்தில் , கடந்த அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜய்பாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குபதிவு செய்தனர். மேலும் விஜய்பாஸ்கர் வீடு உள்ளிட்ட 29 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

Complaint against Ex Minister Vijayabaskar

இந்நிலையில் நெல்லை டி.ஐ.ஜி அலுவலகத்தில் கேரளத்தை ஷர்மிளா என்பவர்  முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் மீது 14 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும்  புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், தனது உயிருக்கு முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கரால் ஆபத்து இருப்பதாகவும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் பணமோசடி குறித்து கேரள அமலாக்க அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது குடும்ப நண்பர் என்றும், அவர் ஏராளமான பணத்தை தங்கமாக மாற்றி வைத்துள்ளதாகவும்  குற்றம் சாட்டினார்.

Complaint against Ex Minister Vijayabaskar

கடந்த 2013-ல் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை எனது கணவர் முதன்முறையாக சந்தித்தார். பின்னர் நட்பின் அடிப்படையில், எங்களது வீடு, கடைகளுக்கு அவர் வந்து சென்றுள்ளார். பின்னர், எங்களோடு இணைந்து தொழில் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். இதனையடுத்து, ரூ.14 கோடி மதிப்பிலான நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதை தொழிலில் முதலீடு செய்வதாகவும் விஜயபாஸ்கரும், அவரது மனைவியும் தெரிவித்தனர். அதன்படி, ரூ.14 கோடி மதிப்பிலான நகைகளை 2017 ஜனவரி முதல் வாரத்தில் 3 பகுதிகளாக பிரித்து சென்னை, புதுக்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் வைத்து அவர்களிடம் ஒப்படைத்தோம் என கூறினார்.

Complaint against Ex Minister Vijayabaskar

கடந்த 2018-ம் ஆண்டு வேறுதொழில் நிறுவனம் தொடங்குவதற்காக விஜயபாஸ்கரிடம் எங்களது நகைகளை திரும்ப கேட்டபோது, பல்வேறு காரணங்களைக் கூறி தொடர்ந்து மறுத்து வந்தார். 2019 மார்ச் மாதத்தில் சென்னையில் ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து ரூ.3 கோடியை மட்டும் அளித்துவிட்டு, மீதி பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவதாக விஜயபாஸ்கரும், அவரது நண்பர்களும் மிரட்டினர். மேலும் அந்த ஹோட்டலில் 5 மணிநேரமாக எங்களை அடைத்துவைத்து மிரட்டி அனுப்பி வைத்தனர்.  தமிழகத்தில் ஆளுங்கட்சி அமைச்சர் என்பதால் எங்களது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி உடனடியாக அவர் மீதோ, அவரது மனைவி மீதோ அப்போது புகார் மனு அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

Complaint against Ex Minister Vijayabaskar

இந்நிலையில் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் இம்மோசடி புகார் குறித்து விசாரிக்க விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் இன்று விஜயபாஸ்கள் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios