Competition is only for DMK and T.T.V. Dinakaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி என்று கூறினாலும், டிடிவி தினகரனுக்கும், திமுகவுக்கும்தான் கடும் போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகரில், இம்மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் இத்தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். நடிகர் விஷால்
மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுமனு வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுவில் சொத்து மதிப்பு உள்ளிட்டவைகள் முறையாக குறிப்பிடவில்லை என்று நடிகர் விஷாலின் மனுவையும், ஜெ.தீபா வேட்புமனுவில் சிலவற்றை பூர்த்தி செய்யப்படாமல் விட்டுள்ளதாலும் அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் இறங்கின. டிடிவி தினகரனுக்கு பிரஸர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுகவிற்கு இடையேதான் கடும் போட்டி என்று கூறினாலும், திமுக, டிடிவி தினகரன் இடையேதான் கடும் போட்டி என்று கருத்து கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

சென்னை, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி நிலவுவதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கு 33 சதவிகித வாக்குகளும், டிடிவி தினகரனுக்கு 28 சதவிகித வாக்குளும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 26 சதவிகித வாக்கள் பெற்று 3-வது இடத்தைப் பிடிக்கும் என்றும், நாம் தமிழர் கட்சி 2.18 சதவிகிதமும, பாஜக 1.23 சதவிகித வாக்கள் பெறும் என்றும் கருத்து
கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.