நடிகர் ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்திருக்கிறார், அவர் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என விசிக தலைவரும், நடிகரும், எம்.பியுமான திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பெண் செயற்பாட்டாளர்கள் பெண்ணிய அமைப்பாளர்களுடன் தொல். திருமாவளவன் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ‘’நடிகர் ரஜினிகாந்த் உடல் நலத்தை காத்துகொள்ள வேண்டும். அரசியலில் வந்து ஜாதி மத பிடியில் சிக்கி மன உளைச்சல் ஆகாமல் அரசியலுக்கு  வராமல் இருப்பது நல்லது. திமுக கூட்டணியில் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜகவினர் செயல்படுகின்றனர். பெண்களைப் பற்றி நான் எப்போதும் அவதூறான கருத்துக்களை கூறியதில்லை என அவர் தெரிவித்தார். 

ரஜினி அரசியலுக்கு வந்தால் அது திமுக கூட்டணியை பாதிக்கும் என்பதால் அவரை அரசியலுக்கு வரவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறது இந்தக் கூட்டணி. அந்த்க் கூட்டணியில் இடம்பிடித்துள்ள திருமாவளவன் தற்போது ரஜினி மீது அக்கறை உள்ளவராகவும், அவரது உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என நீலிக்கண்ணீர் வடிப்பதாக பலரும் கூறுகின்றனர். அந்தக் கூட்டணியில் இருந்து முதல் ஆளாக வெளிப்படையாக ரஜினி அரசியலுக்கு வரகூடாது எனக் கூறியிருக்கிறார் திருமாவளவன்.