comedy actor escaped from political invitation from Tamil actor
நடிகர் விவேக்கை தற்போது சினிமாவில் பர்ப்பதை விட, சமூக சேவை நிகழ்ச்சிகளில் தான் அதிகம் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக மரம் நடுவிழா, கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடல், போன்றவற்றில் தான் அவரை அதிகம் காண முடிகிறது.
திரைப்படங்களில் கூட நகைச்சுவை மூலம் பகுத்தறிவு கருத்துக்களை கூற முயன்றவர் தான் விவேக். அந்த சிறப்பு காரணமாகவே அவருக்கு என ஒரு தனி ரசிகர் வட்டம் உண்டு.

தற்போது இவர் சமுதாய பிரச்சனைகள் குறித்த தனது கருத்துக்களை, சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் பகிர்ந்து வருவது கூறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக விவேக்கை அரசியலுக்கு வருமாறு அழைத்திருக்கிறார் விஷால். சமீபத்தில் ஒரு பேட்டியின் போது பேசிய விஷால் ”விவேக் அரசியலுக்கு வரவேண்டும். அப்படி நடந்தால் ஒரு தொகுதிக்கு நல்ல ஒரு எம்.எல்.ஏ கிடைப்பார்” என தெரிவித்திருக்கிறார்.
விஷாலின் அன்புக்கு நன்றி. நான் “மரம், மாணவர்கள்” என்று கலாம் அய்யா கொடுத்த வேலையை செய்கிறேன். அரசியலுக்கு நான் சரிப்படுவேனா, தெரியவில்லை. https://t.co/Dd6LrIp8nD
— Vivekh actor (@Actor_Vivek) May 21, 2018
இதற்கு பதிலளிக்கும் விதமாக டிவிட்டரில் தனது கருத்தை தெரிவித்திருக்கும் விவேக், விஷாலின் அன்புக்கு நன்றி. நான் மரம் மாணவர்கள் என்று கலாம் ஐயா கொடுத்த வேலையை செய்கிறேன்.அரசியலுக்கு நான் சரிப்படுவேனா என தெரியவில்லை என பதிலளித்திருக்கிறார்.
