உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் சிறுமி பாலியல் வன்முறை படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும்,  பாஜக மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்பாட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. 

   

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்  ஆணைக்கிணங்கவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் அறிவுறுத்தல் படியும் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், உத்திரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டம், பட்டியலின இளம்பெண் மீதான பாலியல் வன்முறை படுகொலையைக் கண்டித்து  ஆறுதல் கூறச்சென்ற பாசத்தலைவர் ராகுல்காந்தி மற்றும்  திருமதி. பிரியங்கா காந்தி அவர்கள் மீதும், பேரியக்கத்தொண்டர்கள் மீதும்  அத்துமீறி அடக்குமுறையைக் கையாண்ட  பாசிச பாஜக மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ,05.10.2020  மாலை 4 மணிமுதல் மாலை 6 மணி வரை சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெறும். 

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை பல்லவன் சாலை எதிரில் உள்ள ஜிம்கானா கிளப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் பேரியக்க முன்னணி தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளார்கள். மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள் பகுதி தலைவர்கள்,,வட்டத்தலைவர்கள், சார்பு அணி தலைவர்கள்,பேரியக்கத்தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறோம். மகாத்மா காந்தியடிகள், அன்னல் அம்பேத்கர்,பெருந்தலைவர் காமராஜர் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளோடு பேரியக்க கொடிகள் தாங்கி அணிவகுத்து வாரீர் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.