குடியுரிமைச் சட்டம் தொடர்பாக தமிழகத்தில் வன்முறையை உருவாக்கிவிடுவார்களோ என்கிற பதற்றம் தனக்கு இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

குடியுரிமைத் திருத்தச்  சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியவுடன் அரசு வன்முறையை கையிலெடுத்தது. தலைநகரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது, ஆளும் அரசு வன்முறையை ஊக்குவிக்கிறது என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறையை டெல்லியில் நிகழ்த்துவதற்கான முயற்சியில் ஆளும் அரசு ஈடுபட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் மனதில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சி நடக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற வன்முறை முயற்சி தடுக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச உரிமையை கேட்பதே தவறென்றால் இது ஜனநாயக நாடாக இருக்க முடியாது. நாட்டின் தலைநகரில் வகுப்புவாத பாசிச சக்திகள் கட்டவிழ்த்து விட்டிருக்கும் வன்முறை மன வேதனையை அளிக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. ஆனால் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அடிப்படைவாதத்தை பின்பற்றச் சொல்கிறது. அதையே தமிழகத்திலும் திணிக்க முயற்சிக்கிறது. பாசிசத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்.

தலித்துகளுக்கு திராவிட இயக்கம் நிறைய செய்துள்ளது. ஆனால்,  அதை பிச்சை என்று சொல்ல முடியாது. அயோத்தி தாசர் , ரெட்டைமலை சீனிவாசன் , எம் சி ராஜா , எம் சி குருசாமி போன்ற தலித் தலைவர்கள் திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாகவே பல  சமூக நீதி செயல்பாடுகளில் பங்காற்றியுள்ளனர்.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக தமிழகத்தில் வன்முறையை உருவாக்கிவிடுவா்களோ எனும் பதற்றம் எனக்கு இருக்கிறது என்றும் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வன்முறையை தடுப்பதில் தோற்றுவிட்டது”என்று தெரிவித்துள்ளார்.