நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வாய்திறக்காதது ஏன்? பாட்ஷாவாக படத்தில் நடித்தால் மட்டும் போதாது.வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன்.
T>Balamurukan

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து முஸ்லீம் மக்கள் சென்னை வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவை சுற்றி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு தடிஅடியில் முடிந்தது. அதில் காவல்துறை தரப்பில் போலீஸ் அதிகாரிகளும், போராட்டக்காரர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் இறந்ததாகவும் செய்திகள் பரவிவருவதோடு போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட போலீசார் மருத்துவமiனியல் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருவதை காவல் ஆணையர் விஸ்வநாதன் பார்வையிட்டு ஆறுதல் கூறியிருக்கிறார்.

தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன்..” ரஜனிகாந்த் பாட்ஷா படத்தில் மட்டும் நடித்தால் போதாது.இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று சொன்னீர்களே ரஜினிக்காந்த் வண்ணாரப்பேட்டைக்கு வருவாரா? இந்தியா மதச்சார்பின்மை நாடு.ஒரு தாய் பிள்ளைகள் போன்றும் மாமன் மச்சான் உறவு வைத்தும் ஒற்றுமையாக வாழ்கின்றோம். ரஜினிக்காந்த் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று நினைத்தால் வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள் என்று ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் வேல்முருகன்.