Come back to politics nanjil sampath

ஹீரோவாக ஆர்ஜே பாலாஜி புதிதாக 'எல்கேஜி' எனும் அரசியல் படத்தில் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் மூத்த அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நடிப்பதை அப்படத்தின் நாயகன் அறிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதிமுக-விலிருந்து விலகிய பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிறகு அ.தி.மு.க-வில் இணைந்து, கொ.பா.செ வாக அவதாரமெடுத்து அதகளம் செய்தது இணையதளங்களில் அழிக்கமுடியாத வரலாறாக மாறியது. நாசாவின் கருத்துகள் விமர்சிக்கும்படி இருந்தாலும் இலன்கர்கள் மத்தியின் ரீச் ஆனார்.

இதனையடுத்து பல அரசியல் வாழ்க்கையில் சறுக்கலைச் சந்தித்த அவர், சமீபத்தில் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில், ஆர்ஜே பாலாஜிக்காக மீண்டும் அரசியல்வாதியாக இருக்கிறாராம் நாஞ்சில் சம்பத். அரசியல் படமான 'எல்கேஜி' படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்காகத்தான் கடந்த சில நாட்களாக சுவர் விளம்பரம் மற்றும் கட்சி கொடி ஆகியவை வெளியிடப்பட்டது. ஆர்ஜே பாலாஜி ஐசரி கணேஷ் தயாரிக்கும் அரசியல் படமான இதற்கு டைட்டில் 'LKG' என வைகபட்டுள்ளது. நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.

இதனையடுத்து ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஆர்ஜே பாலாஜி அரசியல்வாதி கெட்டப்பில் பேசும்போது அவர் அணிந்திருக்கும் மோதிரத்தில் நாஞ்சில் சம்பத் படம் உள்ளது. இதனையடுத்து, இந்தப் படத்தில் நாஞ்சில் சம்பத் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.