உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே. 
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.
*    ஈராக்கின் மேற்கு மொசூல் நகர் அருகேயுள்ள பதூஷ் என்னும் நகரில் உள்ள ராட்சத பிரேத குழிகளில் இருந்து முப்பதொன்பது இந்தியர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 
-    சுஷ்மா சுவராஜ்
*    காவல் துறையினருக்கு 24 மணி நேரமும் பணி வழங்கப்படுவதால் அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் பண்டிகைகளை கூட குடும்பத்தினருடன் கொண்டாட முடிவதில்லை. 
-    நீதிபதி கிருபாகரன்
*    தமிழகத்தில் ரத யாத்திரை மீது அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. சபையில் நான் பேசும்போதெல்லாம் தி.மு.க.வினர் குறுக்கிடுகிறார்கள். கடுஞ்சொற்களை எல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள். 
-    எடப்பாடி பழனிசாமி
*    தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதைப் பொறுக்க முடியாத மு.க.ஸ்டாலின், மக்களை திசை திருப்பும் வண்ணம் பேசுகிறார்! என எண்ணிட தோண்றுகிறது. 
-    ஓ.பன்னீர்செல்வம். 
*    தமிழர்களை பகுத்தறிவும், தன்மாமனமும் உள்ளவர்களாகத் தலைநிமிர செய்த பெரியாரின் சிலையை சிதைத்திருக்கும் ஈனச்செயல் மானமுள்ள தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 
-    ஸ்டாலின்
*    காவிரி மேலாண்மை வாரியம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அமைத்திட வேண்டும். இந்த விஷயத்தில் கமல்ஹாசன் கருத்துக்கு கருத்து கூற விரும்பவில்லை. 
-    ரஜினிகாந்த்
*    அரசியல் நோக்கத்துடன், மக்களை பிளவு படுத்தும் ஊர்வலத்துக்கு அனுமதியளித்து, யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.
-    கமல்ஹாசன் 
*    கர்நாடக சட்டசபை தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு காங் தலைமை சீட் தராவிட்டால் சுயேட்சையாக களமிறங்குவேன். 
-    குத்து ரம்யாவின் அம்மா ரஞ்சிதா
*    தமிழ் சினிமா கடினமான சூழலில் இருக்கிறது. தயாரிப்பாளர்களின் வலி அறிந்து, நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன் வரவேண்டும். 
-    விவேக்
*    தமிழகத்தில் 80% இந்துக்கள் இருந்தும் கூட பா.ஜ.க.வால் இங்கே வெற்றி பெற முடியவில்லை. இங்கே இந்து, முஸ்லீம், கிறுத்தவர்கள் எல்லாரும் சகோதர, சகோதரிகளாக பழகுகிறார்கள். மத ஒற்றுமைக்காக தி.மு.க. தொடர்ந்து போராடும். 
-    தயாநிதி மாறன். 
-    விஷ்ணு பிரியா