சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவி மற்றும் மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பேராசியர் தன்மீது கைவைத்து தவறாக நடந்ததாக சென்னை பல்கலைகழக தொல்லியல் துறை தலைவர் மீது மாணவி கண்ணீர் மல்க பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை இறுதி ஆண்டு மாணவிக்கு, அத்துறைத்தலைவர் சவுந்திரராஜன் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாக மாணவர்கள் தரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கினறனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் தொல்லியல் துறை பேராசிரியர் சௌந்தரராஜன் குறைவான மதிப்பெண்களை வழங்கியதாக மாணவர்கள் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர், குறிப்பிட்ட சில மாணவர்களுக்கும், மாணவிக்கும் தேர்வில் மதிப்பெண் வழங்கவில்லை என்றும் , அது தொடர்பாக மாணவி மற்றும் மாணவர்கள் பேராசியர்களிடம் விளக்கம் கேட்டபோது , மாணவியிடம் துறைத்தலைவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவி மற்றும் மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய அந்த மாணவி, மதிப்பெண் வழங்காதது குறித்து கேள்வி கேட்டபோது , தன்னை தவறான இடங்களில் தொட்டார் என்று தெரிவித்தார். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொல்லியல் துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்