செயலிழந்து போன உளவுத்துறை.. இந்த விஷயத்துல கவுரம் பார்க்காமல் என்ஐஏவிடம் ஒப்படைங்க.. வானதி சீனிவாசன்
கோவை இவ்வளவு பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. கோவையில் தீவிரவாத செயல்கள் நடந்தும் இன்னும் முதல்வர் வந்து பார்க்கவில்லை. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை உக்கடத்தில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காதது ஏன் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கோவை இவ்வளவு பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. கோவையில் தீவிரவாத செயல்கள் நடந்தும் இன்னும் முதல்வர் வந்து பார்க்கவில்லை. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையை முதல்வர் இன்னும் பழிவாங்கும் எண்ணத்துடன் தான் இருக்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது.
இதையும் படிங்க;- கோவை கார் வெடி விபத்து.! பொது வெளியில் கவனமுடன் கருத்து கூற வேண்டும்.! பாஜகவிற்கு சசிகலா அறிவுரை
எல்லாவற்றுக்கும் பத்திரிகை அறிக்கை கொடுக்கின்ற முதல்வர், தங்களது அமைச்சர்கள் வாயிலாக பதிலளிக்கின்ற முதல்வர் இந்த சம்பவம் குறித்து ஏன் வாயை திறக்க மறுக்கிறார். காவல்துறையினரின் புலனாய்வு மற்றும் அவர்களுடைய செய்தியாளர்கள் சந்திப்புகள் எல்லாம் நடைபெறுகிறது. டிஜிபி ஆய்வு, கைது நடவடிக்கைகள் எல்லாம் சரி. ஆனால் முதல்வர் மவுனம் மட்டுமே கேள்விக்குறி.
உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்திருக்கிறது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. 75 கிலோ வெடிமருந்து, சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது மனதெல்லாம் பதறுகிறது. தமிழக காவல்துறையும், தமிழக முதல்வரும், உடனடியாக தமிழக மண் பயங்கரவாத செயல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இந்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக முதல்வர் இதில் கவுரவம் பார்க்க வேண்டாம் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- கோவை சிலிண்டர் வெடிப்புக்கு முன் முபின் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ..? அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்
முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோட்டைமேடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவை மாநகரில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டி தெய்வத்தை வழிபட்டார்.