coconet oil in ration card. Minister kamaraj explanation

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வரும் மார்ச் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படும் என தெரிவித்தார்.

அதே நேரத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லா விட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

இது வரை 1 கோடியே 93 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டாக மாற்றி வழங்கப்பட்டுள்ளது என்றும், . இன்னும் 6,000 பேருக்கு மட்டுமே ஸ்மார்டு கார்டு வழங்க வேண்டி உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

பாமாயிலுக்கு பதில் ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, ஸ்மார்ட் ரேஷன் கார்டு தொடர்பான App செயல்படவில்லை என தொடர்ந்து புகார் வருவதாக நிருபர்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர், App முறையாக செயல்படுவதாகவும், புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.